இம்ரான் கானின் அரசியல் ஆலோசகர் மர்மநபர்களால் கடத்தல்
#Pakistan
#ImranKhan
#Kidnap
#Politics
#Adviser
Prasu
1 year ago

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரது அரசியல் ஆலோசகர் குலாம் ஷபீர். இரண்டு நாட்களுக்கு முன்னதாக லாகூரின் காயன்பான்-இ-அமின் என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
இஸ்லாமாபாத் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றுள்ளார். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் இல்லை என அவரது மகன் பிலால் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அடையாளம் தெரியாத நபர்களால் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூரில் இருந்து கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படப்படுகிறது.
குலாம் ஷபீர் பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரான ஷபாஸ் கில்லின் மூத்த சகோதரர் ஆவார்.



