கிளிநொச்சி காவல் நிலையத்தில் கைதி உயிரிழந்த விவகாரம் - இரு உத்தியோகத்தர்கள் பணியிடைநீக்கம்!

#SriLanka #Kilinochchi #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Dhushanthini K
3 hours ago
கிளிநொச்சி காவல் நிலையத்தில் கைதி உயிரிழந்த விவகாரம் - இரு உத்தியோகத்தர்கள் பணியிடைநீக்கம்!

கிளிநொச்சி காவல்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரை மாய்த்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்தையடுத்து, குறித்த காவல்நிலையத்தின் இரு உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தின்போது, காவல்நிலையத்தில் கடமையில் இருந்ததாக கூறப்படும், உப காவல்துறை பரிசோதகர் ஒருவரும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவருமே பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தாக்குதல் சம்பவமொன்று தொடர்பாக நேற்றுமுன்தினம் கிளிநொச்சி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 66 வயதுடைய ஒருவர் சிறைக்கூடத்தில் உயிரை மாய்த்துக் கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரினால் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளையடுத்து, குறித்த காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவரும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753568481.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!