வடக்கு மாகாணத்தை சிப்பிலியாட்டும் கொடூரமான போதைப்பொருள்!

போதைப்பொருட்களைப்பாவிப்பவர்களை கதாநாயகர்களாகவும் ஆரோக்கியமானவர்களாகவும் நூறுபேரை பறக்கவிட்டு அடிக்கும் புஜபலபராக்கிரமசாலிகளாகவும் காண்பிக்க சினிமாவால் மட்டுமே முடியும். இன்று இலங்கையை குறிப்பாக வடக்குமாகாணத்தை சிப்பிலியாட்டும் கொடூரமான போதைப்பொருள் இந்த ஐஸ் எனும் போதைப்பொருள்தான்.
இது மனநோயாளிகளுக்கான ஒரு மருந்தாக அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் போதைப் பொருளாக அதிகலாபத்திற்கு விற்கப்படுகிறது.
அன்புக்குரிய பெற்றோர்களே அடி முட்டாள்களாக இருக்காதீர்கள்.உங்கள் மகனின் அல்லது மகளின் புத்தகப்பை களைப்பார்வையிடுங்கள் அதில் கண்ணாடிக்குடுவைகள் சிறிய குழாய்கள் இருந்தால் அவற்றில் அதிககவனம் எடுங்கள்.
பியர் சாரயம் சிகரட் என்பன பாவித்தால் மணத்தை வைத்துக்கண்டுபிடிக்கலாம் ஆனால் இவ்வாறான போதைப்பொருட்களில் இப்படியான மணம்வராது. இவற்றை கண்ணாடிக்குழாய்களில் இட்டு சூடேற்றி புகையை உள்ளெடுப்பார்கள்.
அந்தப்புகைதான் போதையேற்றுகிறது.இன்று இப்படியான போதைப்பொருட்கள் பிரபலபாடசாலை மாணவர்களிடம் திட்டமிட்டுத்திணிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தைப்பொறுத்தவரை ஒரு குறித்த பிரதேசத்தை தளமாகக் கொண்ட வியாபாரிகளே இந்தநாசவேலையை செய்கிறார்கள்.
அவர்களைக்கடந்தகால அரசாங்கம் கண்டுகொள்ளாமல் விட்டதால் ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டார்கள். உங்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறையாக இருங்கள் நீங்கள் ஓடி ஓடிச்சொத்துச்சேர்ப்பது உங்கள் பிள்ளைகளுக்காகத்தானே எனவே அவர்களின் ஆரோக்கியத்துக்காகவும் நேரத்தை செலவிடுங்கள்.
பெரும்பாலும் வைத்தியர், ஆசிரியர் போன்ற உயர்தொழில்புரிவோரின் பிள்ளைகளே இப்படிப்பாதிக்கப்படுகிறார்கள். பணம் இல்லாத போது அவர்கள் திருடவும் செய்கிறார்கள். திருடி போலீஸில் பிடிபட்டு அவர்கள் மனவுளைச்சலுக்கும் ஆளாகி வாழ்வைத்தொலைக்கிறார்கள்.
போதைப்பொருட்களில் ஹீரோயிசம் இல்லை அவை உன்னை அழிக்கும் சாத்தன்களே....
நன்றி
-உமாகரன் -இராசையா-
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



