105 வயதில் முதுகலைப் பட்டம் பெற்ற பெண்

#Women #America #Old #Degree
Prasu
1 year ago
105 வயதில் முதுகலைப் பட்டம் பெற்ற பெண்

அமெரிக்காவைச் சேர்ந்த 105 வயது பெண் ஒருவர் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வெர்ஜினியா ஹிஸ்லோப் என்ற வயோதிப ஸ்டான்பர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து கல்வியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

அது அவர் 83 ஆண்டுக்கு முன்பு தொடங்கிய பயணமாகும். 1941ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெறத் தேவையான பாடங்கள் அனைத்தையும் அவர் பூர்த்தி செய்துவிட்டார்.

அப்போது அமெரிக்கா 2ஆம் உலகப் போரில் போரிட தயாராகிக்கொண்டிருந்தது. அவரது காதலனும் போரில் சண்டையிடவிருந்தார். 

ஆய்வறிக்கையை கைவிட்டுவிட்டுத் திருமணம், குடும்பம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்ததாக ஹிஸ்லோப் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கல்வி மீதான ஆர்வத்தை மறந்துவிடவில்லை. 

கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தப் பாடுபட்டார். பெண்களே நிறுவிய ஹெரிடேஜ் பல்கலைக்கழகத்திற்கு நிதி திரட்டியுள்ளார்.

பசிபிக் நார்த்வெஸ்ட் பல்கலைக்கழகத்தில் அவர் பெயரில் ஓர் உபகாரச் சம்பளமே மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. 

அண்மையில் அவரின் மருமகன் ஸ்டான்பர்ட் பல்கலையைத் தொடர்புகொண்டார். அப்போது ஹிஸ்லோப் முதுகலைப் பட்டம் பெற அந்த ஆய்வறிக்கை தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!