ஆடி மாதத்தில் திருமணம் செய்யலாமா?

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
ஆடி மாதத்தில் திருமணம் செய்யலாமா?

ஒவ்வொரு ஆண்டிலும் 12 மாதங்கள் இருந்தாலும், ஆடி மாதம் மிகவும் விசேஷமாக பார்க்க காரணம், அது ஒரு தெய்வீக மாதமாக இருப்பது தான். நமக்கு ஒரு வருடம் என்றால், தேவர்களுக்கு அது ஒரு நாளாகும். 

அதிலும் ஆடி மாதம் தேவர்களுக்கு இறை வழிபாடு செய்யக்கூடிய சந்தியான வேளை ஆகும். அதனால் ஆடி மாதம் என்றாலே கோவில் விழாக்களும், விசேஷங்களும் ஏராளமாக வருவதுண்டு.  

ஏன் ஆடி மாதத்தில் திருமணம், சுப காரியங்கள் வைப்பதில்லை? ஏன் ஆடி மாதத்தில் திருமணம், சுப காரியங்கள் வைப்பதில்லை? ஏன் ஆடி மாதத்தில் திருமணம், சுப காரியங்கள் வைப்பதில்லை? ஆடி மாதத்தில் திருமண போன்ற வைபவங்கள் வைக்கக்கூடாது. அது சுப காரியத்துக்கு ஏற்ற மாதமில்லை என்ற கருத்து நிலவுகிறது. 

ஆனால் உண்மை அது அல்ல. உண்மையில் ஆடி மாதத்தில் குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபடும் வழக்கம் கொண்டவர்கள், கோயிலுக்கு செல்வது தடைப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளைத் தவிர்த்தனர்.

திருமணம் போன்ற சுப காரியங்கள் வைப்பதால், தெய்வ சிந்தனை மாறுவதோடு, தெய்வங்களை தொந்தரவு செய்வதாக மாறும். அதோடு தெய்வங்களின் ஆசீர்வாதம், அனுக்கிரகம் இரண்டுமே பரிபூரணமாகக் கிடைக்காது. இதன் காரணமாக தான் ஆடி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் வைப்பதில்லை. 

அதுமட்டுமல்லாமல் ஆடி மாதத்தில் கரு தரித்தால், சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும் என்பதாலும் புதுமண தம்பதிகளைப் பிரிக்கின்றனர். ஆடி அமாவாசை 2022 எப்போது? - தர்ப்பணம் கொடுக்க சரியான நேரம் தெரிந்து கொள்வோம் ​ஆடி மாதத்தில் வீடு குடியேறுதல் செய்யலாமா? ​ஆடி மாதத்தில் வீடு குடியேறுதல் செய்யலாமா? ஆடி மாதத்தில் வீடு குடியேறுதல் செய்யலாமா?

ஆடி மாதத்தில் வீடு, நிலம் சார்ந்த விஷயங்களை தாராளமாக செய்யலாம் என்பதற்காகவே வாஸ்து புருஷன் நித்திரை விடுவதால் தாராளமாக கிருஹப்ரவேசம், வேறு வீடு குடியேறுதல், புதிய நிலம், வீடு வாங்குதல் போன்ற விஷயங்களை செய்யலாம். ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் தான் வாஸ்து பூஜை, வீடு க்ருகபிரவேசம் செய்யக்கூடாது என ஜோதிட சாஸ்திரம் உரைக்கிறது. மற்றபடி ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் தாராளமாக மேற்கொள்ளலாம்.