பட்டதாரிகளுக்கு பாரிய அநீதியை இழைத்துள்ள NPP அரசாங்கம்!

#SriLanka #Sajith Premadasa #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 months ago
பட்டதாரிகளுக்கு  பாரிய அநீதியை இழைத்துள்ள NPP அரசாங்கம்!

தேசிய மக்கள் சக்தி அரசால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வர்த்தமானி ஒன்றைக் கூட அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆசிரியர் தேர்வு தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அதில் ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சைக்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில், 2025 ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களே தகுதியுடையவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். 

இந்தத் தீர்மானத்தினால், அதற்குப் பின்னர் பட்டப்படிப்பை முடித்த பெருமளவான இளைஞர், யுவதிகளுக்குப் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

வர்த்தமானிகளை வெளியிடுவதற்கு முன்னர் அரச தொழில் கோரும் பட்டதாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களது கருத்துக்களையும் கேட்டறியுமாறு அரசைக் கேட்டுக்கொள்கின்றேன்.

 2025 டிசம்பர் மாதம் வரை பட்டப்படிப்பை நிறைவு செய்த அனைவரும் ஆசிரியர் சேவைப் பரீட்சைக்குத் தோற்றக் கூடிய வகையில் இந்த வர்த்தமானி திருத்தப்பட வேண்டும். 

அவ்வாறு செய்யத் தவறினால் அது பட்டதாரிகளுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும்." எனத் தெரிவித்துள்ளார். 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4