தென்னிலங்கையில் பெண்களுக்கு ஆபத்து : கும்பலுக்கு வலைவீச்சு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

நாட்டின் பல பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்று கூரிய ஆயுதங்கள் மூலம் பெண்களின் தங்க நகைகளை திருடும் கும்பலை கைது செய்ய பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நுகேகொட, மஹரகம, களுத்துறை, கல்கிஸ்ஸ, பிலியந்தலை, பண்டாரகம உள்ளிட்ட பல பிரதேசங்களில் இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இது தொடர்பான திருட்டில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ளனர்.
தங்க சங்கிலிகள் கம்புருகமுவ பகுதியை சேர்ந்த படா என அழைக்கப்படும் ஜானக சஞ்சீவ என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்திய விசாரணையின் பின்னர் திருடப்பட்ட 19 தங்க சங்கிலிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.



