பொலிஸ் பாதுகாப்புடன் GCE O/L பரீட்சைகள் இன்று ஆரம்பமாகுகின்றன!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
பொலிஸ் பாதுகாப்புடன் GCE O/L பரீட்சைகள் இன்று ஆரம்பமாகுகின்றன!

கல்விப் பொதுச் சான்றிதழ் பொதுத் தேர்வு இன்று (06) ஆரம்பமாகிறது.

 இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது. 

இந்த ஆண்டு பரீட்சைக்கு 452,979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த  பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 

பரீட்சைக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து விளக்கமளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டிஐஜி சட்டத்தரணி நிஹால் தல்துவா, அதற்காக துப்பாக்கி ஏந்திய அதிகாரிகள் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  

2000 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பிற்காக தாம் நேரடியாக செயற்படவுள்ளதாகவும், தேவையான அறிவுறுத்தல்களை பொலிஸ் மா அதிபரினால் வழங்குவதாகவும் திரு.நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!