நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பநிலை பதிவாகும் : மக்களுக்கு அறிவுறுத்தல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 week ago
நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பநிலை பதிவாகும் : மக்களுக்கு  அறிவுறுத்தல்!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின்படி, நாட்டின்பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (06.05) மேலும் அதிகரித்து "வலுவான அவதானம்" செலுத்தப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்.  

வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் மிக அதிக அளவில் இருக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பமானது கவனத்திற்குரிய மட்டத்தில் தொடரும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.  

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, முடிந்தவரை நிழலாடிய பகுதிகளில் ஓய்வெடுப்பது, கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என்று திணைக்களத்தின் முன்னறிவிப்புத் துறையின் துணை இயக்குநர்  மெரில் மென்டிஸ் தெரிவித்தார்.

 இதற்கிடையில், அதிக சூரிய ஒளி காரணமாக தலைவலி, வாந்தி, உடல்வலி, தூக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் கடும் வெப்பமான இந்த நாட்களில் பரீட்சை நிலையங்களுக்கு தயாராக வருமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 

குறிப்பாக, முடிந்த அளவு தண்ணீர் அருந்துமாறும், தேர்வு மையத்தில் தங்களுடைய இடத்தில் வெயில் கொளுத்தும் வகையில் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.