சூட்சுமமான முறையில் இரத்தினக்கற்களை இந்தியாவிற்கு கடத்திய நபர் கைது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

இலங்கையில் இருந்து ஏராளமான ரத்தினக் கற்களை கடத்த முயன்ற நபரை விமான நிலைய பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை விமானம் இலக்கமான யு.எல்.127 மூலம் சென்னைக்கு செல்ல முற்பட்ட வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான பயணியின் பயணப் பொதியில் 482.02 கிராம் நிறையுடைய பல்வேறு வகையான இரத்தினக் கற்கள் காணப்பட்டன.
எக்ஸ்ரே இயந்திரங்களில் சிக்காமல் இருக்க கார்பன் தாள்களில் அவை கவனமாக சுற்றப்பட்டிருந்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரத்தினக் கற்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய பயணியை விமான நிலைய சுங்கப் பிரிவினரிடம் ஆஜர்படுத்திய பின்னர் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.



