இலங்கையின் கடற்பரப்புகள் கொந்தளிப்பாக காணப்படும் : மக்களுக்கு எச்சரிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

இலங்கையின் கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் சீற்றத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் கடல் அலைகள், உயரம் (2.5 -3.0) மற்றும் அலையின் கால அளவு (12 - 16) வினாடிகள் வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையில் கடல் அலைகள் நிலத்தை நோக்கி வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் காணப்படுகின்றது.
எனவே கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் கடற்றொழில் மற்றும் கப்பல் போக்குவரத்து சமூகம் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.



