இலங்கையில் மாரடைப்பினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
இலங்கையில் மாரடைப்பினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

இலங்கையில் மாரடைப்பினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதன்படி  பலாங்கொடை பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களில் மாரடைப்பு காரணமாக 30-50 வயதுக்கு இடைப்பட்ட 100% மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக பலாங்கொடை மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார்.   

இந்த தரவுகளின்படி, மாரடைப்பால் இறக்கும் போக்கு குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்களிடையே அதிகரித்துள்ளது.  

மேலும் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு திடீரென வயிற்றில் வீக்கம், மயக்கம், வலிப்பு ஏற்பட்டால் இரத்தப் பரிசோதனை, ஈசிஜி பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.  

30-50 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களும் நடுத்தர வயதினரும் மேற்குறிப்பிட்ட அவசரகால நிலைமைகளுடன் ஏற்படும் மாரடைப்புகளில் இருந்து தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதில் அக்கறை செலுத்த வேண்டுமென பத்மேந்திர விஜேதிலக்க மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!