பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!
#SriLanka
#Ministry of Education
#education
Mayoorikka
1 year ago
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நிறைவு மற்றும் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைளின் ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நேற்றுடன் (03) நிறைவடைகிறது.
பாடசாலை முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் மே 20 திங்கட்கிழமை ஆரம்பமாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.