AI தொழில்நுட்பத்தின் விரிவாக்கம் : இலாபத்தை டிரில்லியன்களில் அதிகரித்த Samsung வருமானம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் விரிவாக்கம் கம்ப்யூட்டர் மெமரி சிப்களுக்கான சந்தைகளில் மீள் எழுச்சியை உண்டாக்குவதால் கடந்த காலாண்டில் 10 மடங்கு இயக்க லாபம் அதிகரித்துள்ளதாக Samsung Electronics தெரிவித்துள்ளது.
தென் கொரிய செமிகண்டக்டர் மற்றும் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் செயல்பாடு இலாபமானது 6.6 டிரில்லியன் வோன்களாக பதிவாகியுள்ளது.
வருவாய் கிட்டத்தட்ட 13% அதிகரித்து 71.9 டிரில்லியனாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
நிறுவனம் தனது செமிகண்டக்டர் வணிகத்திலிருந்து இயக்க லாபத்தில் 1.91 டிரில்லியன்களை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மாதங்களில் மெமரி சிப் சந்தை வலுவாக இருக்கும் என்று சாம்சங் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



