திடீரென திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
#Temple
#TamilCinema
#Director
#Movie
Prasu
2 months ago
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. திரைப்படம் வெளியாக இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் கூலி திரைப்படம் வெற்றிப்பெற வேண்டி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடன இயக்குநர் மற்றும் திரைப்பட குழுவினர், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
