அர்ஜென்டினாவில் தஞ்சம் கோர திட்டமிட்ட பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோ

#Brazil #President #Argentina #Asylum Seekers
Prasu
2 hours ago
அர்ஜென்டினாவில் தஞ்சம் கோர திட்டமிட்ட பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோ

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 2022ம் ஆண்டு நடந்த தேர்தலில் அப்போதைய அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தோல்வி அடைந்தார்.ஆனால் முறைகேடு நடந்ததாக கூறி தனது தோல்வியை ஏற்க போல்சனாரோ மறுத்து ஆதரவாளர்களை திரட்டி போராட்டம் நடத்தினார்.

இதற்கிடையே அவர் மீது தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சி, புதிய ஆட்சியை கவிழ்க்க சதி உள்படபல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் சமீபத்தில் போல்சனாரோவை வீட்டுக்காவலில் வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.இந்த நிலையில் போல்சனாரோ அர்ஜென்டினாவுக்கு தப்பி செல்ல முயற்சி செய்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். 

இந்த தகவல் சுப்ரீம் கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் போல்சனாரோவின் தொலைபேசி உரையாடலில் அவர் அர்ஜென்டினாவுக்கு தப்பிச் சென்று அரசியல் தஞ்சம் கோர விரும்புவதாகக் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலேயின் அரசாங்கத்திடமிருந்து அரசியல் தஞ்சம் கோரி கடிதம் எழுதி உள்ளார். 

அக்கடித்தில் தான் அர்ஜென்டினாவில் அரசியல் தஞ்சம் கோருவதாகவும், தான் பிரேசிலில் அரசியல் துன்புறுத்தல் சூழ்நிலையில் இருப்பதாகவும், உயிருக்கு பயந்து வாழ்வதாகவும் தெரிவித்து உள்ளார். நாட்டில் இருந்து தப்பி செல்ல போல்சனாரோ திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு பிரேசிலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!