நல்லூரில் வீட்டிற்குள் புகுந்து தீ வைத்து நாசப்படுத்திய வன்முறை கும்பல்
#SriLanka
#Jaffna
#Nallur
#fire
#House
Prasu
2 hours ago

நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் அதிகாலை வேளை புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த தளபாடங்களை தீ வைத்துள்ளது.
நல்லூர் ஆலயத்திற்கு 500 மீற்றர் தூரத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் குடும்பத்தினர் நல்லூர் தேர் திருவிழாவிற்கு சென்ற சமயம் , வீட்டில் யாருமில்லாத நேரம் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் வீட்டின் வரவேற்பறையில் காணப்பட்ட தளபாடங்களுக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
வீட்டில் இருந்து பெரும் புகை வருவதனை அவதனித்த கோயிலுக்கு சென்றவர்கள் . அயலவர்களுக்கு அறிவித்தது , அயலவர்களுடன் இணைந்து தீயினை அணைத்துள்ளனர்.
சம்பவத்தை அறிந்து , ஆலயத்திற்கு சென்ற வீட்டாரும் வீடு திரும்பினார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



