அமெரிக்க ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்த முன்னாள் தூதர் நிக்கி ஹாலே

அமெரிக்க அதிபர் டிரம்ப் கட்சியைச் சேர்ந்தவரும், ஐ.நா. சபைக்கான முன்னாள் அமெரிக்க தூதருமான நிக்கி ஹாலே அளித்த பேட்டியில், இந்தியாவை ஒரு மதிப்புமிக்க, சுதந்திரமான மற்றும் ஜனநாயக பங்காளியாக அமெரிக்கா நடத்த வேண்டும். இந்தியா சீனாவைப் போல ஒரு எதிரி அல்ல.
இந்தியாவின் எழுச்சி சுதந்திர உலகத்தை அச்சுறுத்துவதில்லை. சீனாவின் வளர்ந்து வரும் உலகளாவிய உறவுகளை கட்டுப்படுத்த விரும்பினால், இந்தியாவுடன் நட்புறவுகளை மீண்டும் கொண்டு வருவது மிகவும் முக்கியம்.
வரி விதிப்பு பிரச்சினைகள் மற்றும் இந்தியா–பாகிஸ்தான் போரில் அமெரிக்காவின் பங்கு உள்ளிட்ட விவகாரங்களால் இரு பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது.
ஆசியாவில் சீன ஆதிக்கத்தை எதிர்த்து செயல்படக்கூடிய ஒரே நாட்டுடனான 25 ஆண்டுகால உறவைத் துண்டிப்பது அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சீனாவைப் போன்று பெரிய அளவில் உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிடம் உள்ளது,” என்றார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



