உலகளவில் வசூல் சாதனை படைத்த கூலி திரைப்படம்

#Actor #TamilCinema #Collection #Movie #RAJINIKANTH
Prasu
3 hours ago
உலகளவில் வசூல் சாதனை படைத்த கூலி திரைப்படம்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் உலகம் முழுவதும் கூலி திரைப்படம் நேற்று வெளியானது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் ரசிகர்கள் திரையரங்கை அதிரவிட்டு வருகின்றனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து பல்வேறு திரை பிரபலங்கள் திரையரங்குகளில் கூலி படத்தை கண்டு மகிழ்ந்தனர்.இந்த வார இறுதிவரை தமிழநாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ் ஃபுல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் மிக வேகமாக 3 மில்லியன் டாலர்கள் வசூலித்த ஒரு தமிழ் திரைப்படம் என்ற அங்கீகாரத்தை கூலி கைப்பற்றியுள்ளது. மேலும் உலகலவில் முதல் நாள் வசூல் 151 கோடி ரூபாய் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

உலகளவில் அதிகம் வசூலித்த தமிழ் திரைப்படம் என்ற பெருமை மற்றும் வரலாற்றை கூலி திரைப்படம் படைத்துள்ளது. இன்னும் வரும் வாரங்களில் இன்னும் அதிகமாக வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!