வடகரோலினாவில் பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு : மூவர் பலி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
வட கரோலினாவில் கைது வாரண்டில் பணியாற்றிய மூன்று போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன், ஐந்துபேர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல்தாரியின் அடையாளம் வெளியிடப்படவில்லை என்பதுடன், அவர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து மேலும் இருவர் அதிகாரிகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.