மே தின ஆர்ப்பாட்டங்களுக்கு பல அரசியல் கட்சிகள் பேருந்துகளை கோரி விண்ணப்பம்..!
#SriLanka
#Protest
#Bus
#may day
Lanka4
1 year ago

இந்த ஆண்டு மே தின ஆர்ப்பாட்டங்களுக்கு பல அரசியல் கட்சிகள் பேருந்துகளை கோரி விண்ணப்பித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதன்படி விண்ணப்பித்த தரப்பினருக்கு பேருந்துகளை வழங்குமாறு அனைத்து டிப்போக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இம்முறையும் மே பேரணிகளுக்கு பல அரசியல் கட்சிகள் பேரூந்துகளுக்கு விண்ணப்பித்துள்ளதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
அத்துடன், மே தின பேரணிகளுக்காக பல்வேறு அரசியல் கட்சிகள் பணம் செலுத்தி விசேட ரயில் சேவைகளை கோரியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.



