ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி தொடர்பில் மைத்திரியின் வாக்குமூலம் அம்பலம்
#SriLanka
#Easter Sunday Attack
#Maithripala Sirisena
Mayoorikka
1 year ago

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கிய இரகசிய வாக்குமூலத்தில், இந்நாட்டு பிரஜையோ அல்லது இந்த நாட்டின் வேறு பிரஜையோ ஏப்ரல் - 21 பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடவில்லை என தெரிவித்ததாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று (26) நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் விசாரணைகள் நடைபெற்று வருவதால் சில உண்மைகளை வெளியிட முடியாது எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.



