இலங்கையில் அறிமுகமாகவுள்ள QR முறையிலான அடையாள அட்டை

#SriLanka #people #Minister #Security #QRcode #National Identity Card
Prasu
1 year ago
இலங்கையில் அறிமுகமாகவுள்ள QR முறையிலான அடையாள அட்டை

இலங்கையில் தற்போதுள்ள தேசிய அடையாள அட்டையை விட சிறந்த அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கான விலை மனுக்கோரல் திறக்கப்பட்டு, தற்போதுள்ள தேசிய அடையாள அட்டையில் இருந்த குறியீடு நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக QR குறியீட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

நுவரெலியாவில் ஆட்பதிவு திணைக்களத்தின் புதிய மத்திய மாகாண அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள 340 இடங்கள் உள்ளதாகவும், ஆனால் அரசாங்கத்திற்கு நிதிப் பிரச்சினைகள் இருப்பதாகவும், ஆனால் மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக நாடு முழுவதும் பல அலுவலகங்கள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!