முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
#Court
Dhushanthini K
1 year ago

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இம்மாதம் 30 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டவிரோதமாக வேலை செய்து சம்பாதித்த 27 மில்லியன் ரூபாய் பணத்தைக் கொண்டு கொழும்பில் கின்சி வீதியில் சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்துள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று (25.04) அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் இது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 30ஆம் திகதி எடுக்கப்படும் என உயர் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மஹரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.



