வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சமன் பத்திரன!
#SriLanka
#NorthernProvince
#Health
Mayoorikka
1 year ago

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சமன் பத்திரன இன்று (24) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடந்த காலத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக பணியாற்றியவர் இடமாற்றம் பெற்றுச் சென்ற நிலையில், அப்பதவிக்கான பொறுப்புக்களை வைத்தியர் சமன் பத்திரன இன்றைய தினம் ஏற்றுள்ளார்.
தமது செயற்பாடுகள் தொடர்பாக வட மாகாணத்தின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் 4 வருடங்களுக்கு நான் இன மத மொழிக்கு அப்பால் சென்று அனைவரது சுகாதார மேம்பாட்டுக்கும் என்னால் இயன்ற சேவையை வழங்குவேன் என்றார்.



