மட்டக்களப்பில் தியாகதீபம் அன்னை பூபதிக்கு அஞ்சலி!

#SriLanka #Batticaloa
Mayoorikka
1 year ago
மட்டக்களப்பில் தியாகதீபம் அன்னை பூபதிக்கு அஞ்சலி!

தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி, மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, அன்னையின் உருவப்படம் தாங்கிய ஊர்தி, மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பகுதியை நேற்று (18) மாலை வந்தடைந்தது.

 இதன்போது, தியாகதீபம் அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு அப்பகுதி மக்கள் சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

images/content-image/2024/04/1713517244.jpg

 கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ். மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்த அன்னையின் உருவப்படம் தாங்கிய ஊர்தி, வடக்கு மற்றும் கிழக்கு எங்கும் பயணித்த நிலையில், அப்பகுதி மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது. 

 மட்டக்களப்பில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் இன்று (19) அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில், இவ்வூர்தி பவனி இடம்பெற்று வருகின்றது.

images/content-image/2024/04/1713517274.jpg

 மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மாமாங்கேஸ்வரர் கோவிலுக்கு முன்பாக 1988 மார்ச் 19ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து, ஏப்ரல் 19ஆம் திகதி உயிர் துறந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!