ஒருலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் ஆவணங்களை ஆவணப்படுத்திய நூலக நிறுவனம்!

#SriLanka #books
Mayoorikka
1 year ago
ஒருலட்சத்து  ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் ஆவணங்களை ஆவணப்படுத்திய நூலக நிறுவனம்!

தமிழில் வெளிவந்த ஆவணங்களை ஆவணப்படுத்தி இலவச மற்றும் திறந்த அணுகல் மூலம் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை ஆதரிக்கும் நிறுவனமான நூலக நிறுவனம் பல்வேறுபட்ட தமிழ் ஆவணங்களை ஆவணப்படுத்தி வருகின்றது.

 தற்போதுவரை நூலக நிறுவனத்தால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள மொத்த ஆவணங்களின் எண்ணிக்கை 150,926 இனை எட்டியுள்ளது.

 அவ்வகையில் அச்சு ஆவணங்களின் எண்ணிக்கை 115,207 இனை எட்டியுள்ளது. நூலகம், பல்லூடக நூலக வலைத்தளத்தில் மொத்தம் 35,173 ஆவணங்களும், 678 சுவடிகளும் உள்ளன.

images/content-image/2024/04/1713432897.jpg

 இந்த நூலக நிறுவனமானது தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும் அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கற்ற தன்னார்வ நோக்கோடு இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!