ஈலிங் கனகதுர்க்கை ஆலய அனுசரணையுடன் முல்லைத்தீவில் அன்னை ஶ்ரீ சாரதா நிலைய கட்டடம்!
#SriLanka
#Mullaitivu
#London
Mayoorikka
1 year ago
லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அன்னை ஶ்ரீ சாரதா நிலையத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றுள்ளது.
இந்த அடிக்கல் நாட்டு விழா 18.04.2024 இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கட்டடத்திற்கான நிதி அனுசரணையினை ஆலய நிர்வாக தலைவரான கலாநிதி பரமநாதன் ஐயா அவர்கள் வழங்கியிருந்தார்.

இதில் அன்னை ஶ்ரீ சாரதா நிலையத்தின் பொறுப்பதிகாரிகள் உட்பட அங்குள்ள பிள்ளைகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர்.

லண்டனில் உள்ள சைவ ஆலயங்களில் பிரபல்யமான ஆலயமான ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் தொடர்ந்தும் ஈழத்தில் உள்ள வறிய மக்களுக்கு பல்வேறுபட்ட வாழ்வாதார உதவிகளை வழங்கி வருகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.





