நாளை கொழும்பில் மாபெரும் போராட்டத்திற்கு தயாராகும் தொழிலாளர்கள்!
#SriLanka
#Protest
Mayoorikka
1 year ago

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதனமாக 1,700 ரூபாவினை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் கொழும்பில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு பேச்சுவார்த்தையை முதலாளிமார் சம்மேளனம் புறக்கணித்தமை மற்றும் வேதன உயர்வு வழங்காமை என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக நாளை காலை 9 மணி முதல் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளவர்கள் கறுப்புப்பட்டி அணிந்து கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



