கடலில் மூழ்கிய 21 இலங்கை பிரஜைகளை காப்பாற்றிய ஈரான் அரசு!
#SriLanka
#Iran
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஓமன் வளைகுடாவிற்கு அருகில் மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்களை ஈரான் மீட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குக் தீவுகளின் கொடியுடன் எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் தெற்கு நகரமான ஜாஸ்கில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் (30 மைல்) தொலைவில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
"ஒரு மீட்புக் கப்பல் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டு 21 பணியாளர்கள் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மருத்துவ கவனிப்பு தேவைப்படும் ஐந்து பேருக்கு" ஜாஸ்க் அவசர சேவைகளால் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தி, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்து வரும் கனமழையால், ஓமானில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



