மன்னார் - பொற்கேணி கிராம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு!

#SriLanka #Mannar #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 week ago
மன்னார் - பொற்கேணி கிராம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு!

லைகாவின் ஞானம் அறக்கட்டளை யின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எஸ்.பி பொற்கேணி கிராமத்தில் மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட மூன்று குழாய் நீர் கிணறுகள் இன்றைய தினம் (17.04) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.  

குறித்த கிராமத்தில் மக்கள் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்ற நிலையில் குறித்த மக்களின் குடிநீர் தேவையை இதுவரை எந்த அதிகாரிகளும் அரசியல் பிரதிநிதிகளும் தீர்த்து வைக்கவில்லை என அந்த மக்கள் தெரிவித்தனர்.  

இந்த நிலையில் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் மன்னாரில் அமைந்துள்ள லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் குறித்த கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு குறித்த கிராமத்தில் குடி நீருக்காக மூன்று குழாய் நீர் கிணறுகள் அமைக்கப்பட்டு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.  

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன்,மத தலைவர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் லைக்காவின் ஞானம் அறக்கட்டளை பணியாளர்கள் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.  

இதன் போது தமது கிராமத்தை அண்டிய ஏனைய கிராமங்களில் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கப்பட்ட போதும்,தமது கிராமத்தில் இது வரை குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட வில்லை எனவும் இதனால் தாம் பல வருடங்களாக குடி நீர் வசதி இன்றி பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்து வந்ததாகவும் தற்போது லைக்காவின் ஞானம் அறக்கட்டளை இன் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள இவ உதவி தமக்கு பாரிய பேருதவியாக அமைந்துள்ளதாக அக்கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.