முல்லைத்தீவில் காவலாளிகளை தாக்கிவிட்டு ஆடுகளை களவாடிய ஒருவர் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
முல்லைத்தீவில் காவலாளிகளை தாக்கிவிட்டு ஆடுகளை களவாடிய ஒருவர் கைது!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மல்லிகைதீவு பகுதியில் ஆட்டு காவலாளிகளை தாக்கிவிட்டு ஆடுகளை களவாடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.  

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு 9ஆம் வட்டாரம் , மல்லிகைதீவு பகுதியில் ஆட்டு மந்தையில் இருவர் காவல் கடமையில் இருந்த போது திடீரென வந்திறங்கிய குழுவினர் ஆடுகளை களவாடி செல்ல காவல் கடமையில் இருந்த இருவரையும் தாக்கிவிட்டு 9 இலட்சத்தி முப்பத்தையாயிரம் பெறுமதியான 35 ஆடுகளை கொண்டு சென்றுள்ளனர்.  

தாக்குதலுக்கு இலக்கான இருவரில் ஒருவர் 55 வயதுடைய நபர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.  

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தெரியபடுத்தியதனையடுத்து சந்தேகத்தின் பேரில் வற்றாப்பளை பகுதியை சேர்ந்த 32 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் 15 ஆடுகள் மீட்கப்பட்டு, ஆடுகளை கடத்தி செல்ல பயன்படுத்திய வொலிரோ கப் ரக வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளளது.  

இந்நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையில் உப பொலிஸ் பரிட்சகர் தென்னக்கோன், பொலிஸ் சார்ஜன் (70537) குணவர்த்தன , பொலிஸ் கொஸ்தாபல்களான (57503) பிஜரத்ன, (67616) மதுரங்க, (88509) பிரதீபன், (91723) அருஸ், (92873) டினுக்சன், (105152) ரவிராஜ், (105201) லக்சான், பொலிஸ் கொஸ்தாபள் சாரதி (80425) அபயக்கோன் ஆகிய பொலிஸ் குழுவினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.  

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருவதோடு விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!