யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்து: இளைஞன் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள நிலை
#SriLanka
#Jaffna
#Accident
Mayoorikka
1 year ago
யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞன் காயமடைந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (16) பிற்பகல் யாழ்ப்பாணத்திலிருந்து பலாலி வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட காருடன் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞன் காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் இரு வாகனங்களையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.