கொத்து ரொட்டியை ரூ.1900 க்கு விற்க முயன்றவருக்கு ஏற்பட்ட சிக்கல்!
#SriLanka
#Food
Mayoorikka
1 year ago

கொழும்பு, வாழைத்தோட்டம் புதுக்கடை பிரதேசத்தின் வீதி உணவுப் பகுதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளர் ஒருவர் வாழைத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டவர் ஒரு கொத்து ரொட்டியின் விலையைக் கேட்டபோது, கடைக்காரர் 1900 ரூபாய் என்று கூறினார். வெளிநாட்டவர் அதை வாங்க மறுத்துவிட்டார். இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வலுவாகப் பரவி வருகிறது.
காணொளியின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.



