வெங்காய இறக்குமதி தொடர்பில் இன்று தீர்மானம்
#India
#SriLanka
#onion
#Import
Mayoorikka
1 year ago

இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை அரசாங்கத்தின் ஊடாக இறக்குமதிய செய்வதா அல்லது தனியார் மூலம் இறக்குமதி செய்வதா என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
10,000 மெட்ரிக் தொன் பெரிய வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்திருந்தனர்.



