இலங்கையில் இ-விசா முறையை இன்று முதல் அமுற்படுத்த நடவடிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 week ago
இலங்கையில்  இ-விசா முறையை இன்று முதல் அமுற்படுத்த நடவடிக்கை!

சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் “இ-விசா” முறை இன்று (17) முதல் அமுல்படுத்தப்படும் என குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

திணைக்களத்தின்  கட்டுப்பாட்டாளர் ஜெனரல்  ஹர்ஷ இலுக்பிட்டிய, ஆரம்பத்தில் ஐந்து மொழிகளில் "இ-விசா" விண்ணப்பிக்கும் வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டார். 

"புதிய தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட இ-விசா முறை இன்று முதல் அமுல்படுத்தப்படும். அதன்படி, எந்த நாட்டிலிருந்தும் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த வசதி அமுல்படுத்தப்படவுள்ளது. 

ஆன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அனைத்து வகையான விசாக்களும் பாதுகாப்பு அடிப்படையில் கூடுதல் ஆவணங்களை எடுத்துக்கொள்வதைக் கருத்தில் கொண்டு 5 மொழிகளில் நாங்கள் பராமரிக்கிறோம்.  

03 வாரங்களுக்குள் அனைத்து வீசா விண்ணப்பங்களுக்கும் இந்த முறை பயன்படுத்தப்படும் என  ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார். தற்போது சுற்றுலா விசாக்களுக்கு மட்டுமே இந்த முறையை அறிமுகப்படுத்தி உள்ளோம்.

அடுத்த சில வாரங்களில் கல்வி, வணிகம் என அனைத்து விசா வகைகளுக்கும் இந்த முறையை அறிமுகப்படுத்த உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.