வவுனியாவில் வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல்!
#SriLanka
#Vavuniya
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

வவுனியா பொதுவைத்தியசாலையின் காவலாளிகள் மீது இளைஞர்குழு ஒன்று நேற்றயதினம் இரவு தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்றயதினம் (16.04) இரவு11மணியளவில் வைத்தியசாலையில் நோயாளி ஒருவரை பார்வையிடுவதற்காக இளைஞர்கள் குழு ஒன்று வருகைதந்துள்ளது.
இதன்போது கடமையில் இருந்த காவலாளிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்ப்பட்டுள்ளது. அது கைகலப்பாக மாறியது.
சம்பவத்தில் தாக்குதலுக்கிலக்கான காவலாளி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையின் விபத்துபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



