மதவாச்சியில் விதைப்பை அகற்றப்பட்ட விவகாரம் : இரு பொலிஸாருக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
மதவாச்சியில் விதைப்பை அகற்றப்பட்ட விவகாரம் : இரு பொலிஸாருக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

இளைஞன் ஒருவருக்கு விதைப்பை இழந்தமை தொடர்பிலான வழக்கு இன்று (16) மதவாச்சி நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டது.  

இந்த வழக்கை எதிர்வரும் 24ஆம் திகதி மீளப் பரிசீலிக்குமாறும், சந்தேகநபர்களை அன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மெதவாச்சிய நீதவான் இமேஷா மதுபானி தர்மதாச உத்தரவிட்டார்.  

இந்த சம்பவம் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்புமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

மதவாச்சி பொலிஸ் பிரிவின் இரு உத்தியோகத்தர்களின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை மூலம் விதைப்பை அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 

தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இன்று (16.04) மதவாச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 

இந்த வழக்கில் சுயாதீன கண்காணிப்புக் குழுவாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆஜராகியிருந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!