மரக்கறிகளின் விலைகள் தொடர்பில் வழமைக்கு மாறான நிலை!
#SriLanka
#prices
#Vegetable
Mayoorikka
1 year ago

பண்டிகைக் காலம் முடிவடையும் போது மரக்கறிகளின் விலைகளும் குறைவடைந்துள்ளன. பண்டிகைக் காலம் முடிவடையும் போது மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பது வழக்கம்.
ஆனால் இந்த வருடத்தில் பண்டிகை காலம் முடிவடையும் போது மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கொழும்பு புறக்கோட்டையில் இன்று (16) 250 கிராம் தக்காளி 40 ரூபாவாகவும், 250 கிராம் பீன்ஸ் 50 ரூபாவாகவும், 250 கிராம் வெண்டிக்காய் 50 ரூபாவாகவும், 250 கிராம் கரட் 100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.



