யுக்திய நடவடிக்கையை இன்னும் கடுமையாக்க திட்டம்: பொலிஸ் மா அதிபர்
#SriLanka
#Police
Mayoorikka
1 year ago

புத்தாண்டு பண்டிகை காலத்தின் பின்னர் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களை ஒடுக்குவதற்கு பொலிஸார் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இரட்டிப்பாக்கவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள்களை எதிர்த்துப் போராடுவதற்கு பொலிஸாருக்கு மிகப் பெரிய அளவிலான ஆற்றல் உள்ளது, ஆனால் ஒரு சிறிய அளவு மட்டுமே இப்போதைக்கு களமிறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
“குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு முயற்சிகள் மிகவும் வெற்றிகரமாக உள்ளன. தமிழ் சிங்கள் புத்தாண்டின் பின்னர் பாதாள உலகத்தை ஒடுக்குவது தொடர்பான செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்..” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



