தேர்தலுக்கு முன்னர் வாகன வசதியை செய்து தாருங்கள்: எம்பிக்கள் கோரிக்கை!

#SriLanka #Election
Mayoorikka
1 year ago
தேர்தலுக்கு முன்னர் வாகன வசதியை செய்து தாருங்கள்: எம்பிக்கள் கோரிக்கை!

ஆரம்பத்தில் வழங்கப்பட்ட சுங்க வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்க முடியாவிட்டால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் குறைந்த விலையில் வாகனம் அல்லது வாகன அனுமதிப்பத்திரம் வழங்குமாறு சபாநாயகர் மற்றும் அரசாங்கத் தலைவர்களிடம் அண்மையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 

 இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற குழுவில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க எம்.பி.க்கள் குழு எதிர்பார்க்கிறது. எதிர்வரும் தேர்தலில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வாகனம் இல்லாதது பாரிய பிரச்சினையாக உள்ளதாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்துள்ளனர்.

 ஒரு வாகனம் கூட இல்லாத பல புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!