உலகின் மிகவும் சுவையான அன்னாசி இலங்கையில்!
#SriLanka
Mayoorikka
1 year ago

உலகின் மிகவும் பிரபலமான அன்னாசி வகைகளில் ஒன்றான MD 2 அல்லது Super Sweet pine apple அன்னாசிப்பழத்தை இலங்கையில் பயிரிடுவதற்கு உடனடியாக பரிந்துரைக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த அன்னாசி வகைக்கு உலக சந்தையில் அதிக கிராக்கி இருந்தாலும், அந்த அன்னாசி வகையை இலங்கையில் பயிரிட இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், குறித்த அன்னாசி வகையை இலங்கையில் பயிரிடும் பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், குறித்த அன்னாசி வகையை பயிரிடுவதற்கு விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



