திடீரென இலங்கைக்கு வரும் ஈரான் ஜனாதிபதி!
#SriLanka
#Iran
Mayoorikka
1 year ago
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.