அம்பாறையில் இடம்பெற்ற கோர விபத்து : பலர் காயம்!

#SriLanka #Batticaloa #Accident #Ampara #Tamilnews
Dhushanthini K
1 year ago
அம்பாறையில் இடம்பெற்ற கோர விபத்து : பலர் காயம்!

அம்பாறை மாவட்டம் மருதமுனை பகுதியில் வாகனங்கள் சில நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. 

கடும் மழை பெய்த சந்தர்ப்பத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பெரிய நீலாவணை போக்குவரத்து பொலிஸார் குறிப்பிட்டனர்.  

இதில்  மட்டக்களப்பில் இருந்து நிந்தவூர் பிரதேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்த கார், மருதமுனை பிரதான வீதியில் திரும்ப முற்பட்ட போது குறித்து வீதியினால் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மற்றும் பஸ் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

இதன் போது மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டிகளில் வந்தவர்கள் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

தற்போது சீரற்ற வானிலை நிலவுவதால் வீதிகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் அவதானத்துடன் செயல்படுமாறு பெரியநீலாவனை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!