கொழும்பு மும்பை இடையே நேரடி விமான சேவை!
#SriLanka
#Mumbai
Mayoorikka
1 year ago

இந்தியாவின் இண்டிகோ எயார்லைன்ஸ் கொழும்பு மற்றும் மும்பை இடையே நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
வாரத்திற்கு மூன்று தடவைகள் இந்த விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. தற்போது சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத்திலிருந்து கொழும்பிற்கு இண்டிகோ எயார்லைன்ஸ் மூலம் நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.
விமானங்களின் எண்ணிக்கை மற்றும் பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், இண்டிகோ எயார்லைன்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாக கருதப்படுகிறது.



