தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை! செந்தில் தொண்டமான்
#SriLanka
#SenthilThondaman
Mayoorikka
1 year ago

ஜனாதிபதித் தேர்தலுக்கு தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க நடவடிக்கை எடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இதனைத் தெரிவித்தார்.



