வவுனியாவில் இளைஞர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!

#SriLanka #Vavuniya #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
வவுனியாவில் இளைஞர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!

அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் விலங்குகளின் நீர்த் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு வவுனியா - மன்னார் வீதியின் சில பகுதிகளில் மண் சட்டி மற்றும் சிரட்டைகளைப் பயன்படுத்தி இளைஞர்களினால் தண்ணீர் தொட்டி இன்று (11.04)  அமைக்கப்பட்டுள்ளது.  

வவுனியாவில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக பறவைகள் பல நீரின்றி அவதிப்படுகின்றன. 

இந்நிலையில் இளைஞர்கள் சிலர் தாமாக முன் வந்துவவுனியா - மன்னார் வீதியில் காணப்பட்ட மரங்களில் மண்சட்டி மற்றும் சிரட்டை என்பவற்றை மரக் கிளைகளில் கட்டி அதற்குள் நீர் விட்டு தொட்டி அமைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.

இளைஞர்களின் மனிதநேயமிக்க குறித்த செயற்பாடு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!