இலங்கையில் முதலீடு செய்யும் சீன நிறுவனங்கள்: அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து

#SriLanka #China #President
Mayoorikka
1 year ago
இலங்கையில் முதலீடு செய்யும்  சீன நிறுவனங்கள்: அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து

சீன நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ‘நியாயமான மற்றும் வெளிப்படையான’ சூழலின் அவசியத்தை சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.

 பிரதமர் தினேஸ் குணவர்தனவுடன் அண்மையில் நடத்திய சந்திப்பின்போது சீன ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமது நாடு முடிவுகளை எடுக்கும் போது தேவையில்லாமல் மற்ற நாடுகளால், இலங்கையின் முடிவுகள் குறித்து கவனம் செலுத்தப்படுவது தொடர்பில் சீனா மகிழ்ச்சியடையவில்லை என்றவாறான நிலைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

 எனினும் சீன ஜனாதிபதி தனது கருத்துக்களில் எந்தவொரு மூன்றாவது நாட்டின் பெயரையும் குறிப்பிடவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜேர்மனியில் இருந்து ஆராய்ச்சி கப்பலை நாட்டுக்குள் அனுமதித்த போதும், தமது ஆராய்ச்சிக் கப்பல்களை இலங்கை அனுமதிக்காமை குறித்து சீனப் பிரதமர் லீ கியாங் கவலை தெரிவித்துள்ளார்.

 இந்நிலையில், ஜேர்மன் கப்பலை எரிபொருள் நிரப்புவதற்கு மட்டுமே இலங்கை அனுமதித்துள்ளதாக பிரதமர் குணவர்தன பதிலளித்துள்ளார். சட்டத்தின் பிரகாரம் மீள்நிரப்புதல் போன்ற கோரிக்கைகளை இலங்கை நிராகரிக்க முடியாது என்றும் சீன ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!