மக்களை பொருளாதார பங்குதார்களாக்குவோம்

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe
Mayoorikka
3 weeks ago
மக்களை பொருளாதார பங்குதார்களாக்குவோம்

கல்வி, காணி, வீடு, வியாபார உரிமைகளை உறுதிப்படுத்தி. மக்களை பொருளாதாரத்தில் வலுவான பங்குதாரர்களாக மாற்றிக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 கொழும்பு முகத்துவாரத்தில் நடைபெற்ற ரன்திய உயன வீட்டுத் தொகுதியை பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், பொருளாதாரத்தைப் பலப்படுத்த நாம் அமுல்படுத்திய வரிக் கொள்கை வாழ்க்கைச் சுமையை மேலும் அதிகப்படுத்தியது. 

ஆனால் அந்த கஷ்டங்களை நீங்கள் தாங்கிக் கொண்டதாலேயே, கடன் வாங்காமலும், பணம் அச்சடிக்காமலும் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க முடிந்தது. 

அதனால் தான் இந்த வருடத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடிந்தது. ரூபாவின் பெறுமதியும் வலுவடைந்துள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்றிக் கூறும் வகையிலேயே நிரந்தர காணி உரிமை, நிரந்தர வீட்டுரிமையை வழங்குவதாக கருதுகிறேன். எதிர்காலத்தில் 50,000 வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்படும். 

நான் பிரதமராக பதவி வகித்த காலத்தில் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 1996 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளையும் இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம். காணி, வீட்டு உரிமைகளுக்கான நிரந்தர உரிமைகள் இதற்கு முன்னதாக வழங்கப்படவில்லை. 

எதிர்காலத்தில் கல்வி,காணி, வீட்டு, வியாபார உரிமைகளை மக்களுக்கு வழங்கி பொருளாதாரத்தை மக்கள் பக்கம் விரிவுபடுத்தி நாட்டின் பொருளாதாரத்திற்கான பெரும் பங்களிப்பை அதனூடாக பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறேன் என்றார்.