நாட்டின் தேசிய பூங்காக்களை பார்வையிட வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
3 weeks ago
நாட்டின் தேசிய பூங்காக்களை பார்வையிட வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில், நாட்டின் தேசிய பூங்காக்களைப் பார்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. 

ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் 200,000க்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தேசிய பூங்காக்களுக்கு வருகை தந்ததாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அவர்களில் 100,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யால தேசிய பூங்காவை பார்வையிட வந்துள்ளனர்.  

மேலும், வஸ்கமுவ, குமண, வில்பத்துவ, புந்தல, உடவலவ, மின்னேரியா, கௌதுல்ல போன்ற தேசிய பூங்காக்களுக்கு அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

தேசிய பூங்காக்களுக்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மூலம் கடந்த மூன்று மாதங்களில் 200 கோடி ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேசிய பூங்காக்கள் மூலம் பெறக்கூடிய வருமானம் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை, வருடத்தில் 686,321 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தீவிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் எனவும், 106,004 பேர் எனவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.